அஸ்ஸலாமு அலைக்கும் வர்ஹ - எங்கள் இறைவா! எங்களுக்கு, எங்களுடைய பிரகாசத்தை நீ முழுமையாக்கி வைப்பாயாக! எங்களுக்கு மன்னிப்பும் அருள்வாயாக! நிச்சயமாக நீ எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றலுடையவன்”. 66:8 23:118

வெள்ளி, 27 ஜூலை, 2012

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மீது ஸலவாத்துச் சொல்லுதல் - ஸலவாத்து

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மீது ஸலவாத்துச் சொல்லுதல் மிக முக்கிய சுன்னாவாகும். அது ஒரு முக்கிய திக்ராகவும் அமைகிறது. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மீது ஸலவாத்துச் சொல்லுதல் என்பது அல்லாஹ்விடத்தில் ஸலவாத்துச் சொல்லுமாறு பிரார்த்திப்பதாகவே அமைகிறது.

இறைத்தூதர் (ஸல்) அவர்களது பெயரைச் சொல்லக் கேட்டும்போது ஸலவாத்துச் சொல்வது வாஜிபாகவும் அமைகிறது. இவ்விஷயங்கள் குறித்து விளக்குகின்ற அல்குர்ஆன் வசனங்களும், ஹதீஸ்களும் பின்வருமாறு;

"நிச்சயமாக அல்லாஹ்வும், அவனது மலக்குகளும் நபி மீது ஸலவாத்துச் சொல்கிறார்கள். விசுவாசிகளே! நீங்களும் அவர்கள் மீது ஸலவாத்தும் ஸலாமும் சொல்வீர்களாக!"
(ஸூரா அல் அஹ்ஜாப், வசன எண்: 56.)

1. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்:

"யார் என்மீது ஒருமுறை ஸலவாத்துச் சொல்கிறாரோ அவர் மீது அல்லாஹ் பத்து முறை ஸலவாத்துச் சொல்கிறான்"
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு அல் ஆஸ் (ரலி)
ஆதார நூல்: ஸஹீஹ் முஸ்லிம்.
2. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்:

"என் பெயர் கூறப்பட்டும் என் மீது ஸலவாத்துச் சொல்லாதிருப்பவரே உலோபியாவார்"
அறிவிப்பவர்: அலி இப்னு அபூதாலிப் (ரலி)
ஆதார நூல்கள்: ஸுனன் திர்மிதி, முஸ்னத் அஹ்மத்.

ஸலவாத்துச் சொல்லும் முறை

"ஸலவாத் இப்றாஹீமிய்யா" என்ற தொழுகையில் அத்தாஹிய்யாத்தின் இறுதியில் ஓதுகின்ற "ஸலவாத்" இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மீது ஸலவாத்துச் சொல்வதின் பூரண வடிவமாகும். எனினும்,

"அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மத்"

பொருள்: யா அல்லாஹ்! முஹம்மத் (ஸல்) அவர்கள் மீது அருள் புரிவாயாக!

என்று சொல்லிக் கொள்வது அதன் சுருக்க அமைப்பாகும். இதனை,

"ஸல்லல்லாஹு அலா முஹம்மத்"

பொருள்: முஹம்மத் (ஸல்) அவர்கள் மீது அல்லாஹ் அருள் புரிவானாக!
என்றும் சொல்லிக் கொள்ளலாம்.

முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடமிருந்து மக்களுக்கு இறைத்தூதை கொண்டு வந்து தந்தவர். எனவேதான் அவர்களை நம்பிக்கை கொள்ளல் ஈமானின் ஒரு பகுதியாகிறது. இதன் காரணமாகவே அவர்கள் மீது ஸலவாத்துச் சொல்லுமாறு, அருள் புரியுமாறு அல்லாஹ்வைப் பிரார்த்தித்தல் உயர்ந்த வணக்கமாகிறது. இதுவே இறைத்தூதர் மீது ஸலவாத்துச் சொல்லல் என்பதன் பொருளாகும். இந்த வகையில் தான் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் பெயர் சொல்லப்பட்டும் அந்த நபியின் உயர்ந்த பணியை உணர்ந்து இந்த ஸலவாத்தை, பிரார்த்தனையைப் புரியாதிருத்தல் பெருங்குற்றமாகக் கருதப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக