அஸ்ஸலாமு அலைக்கும் வர்ஹ - எங்கள் இறைவா! எங்களுக்கு, எங்களுடைய பிரகாசத்தை நீ முழுமையாக்கி வைப்பாயாக! எங்களுக்கு மன்னிப்பும் அருள்வாயாக! நிச்சயமாக நீ எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றலுடையவன்”. 66:8 23:118

திங்கள், 27 ஆகஸ்ட், 2012

ஆடை அணிகின்ற போது கூறப்படும் துஆ! - துஆ

"அல்ஹம்து லில்லாஹில்லதீ கஸானீ ஹாதா(ஸ்ஸவ்ப) வரஜகனீஹி மின் ஃகைரி ஹவ்லின் மின்னீ வலா குவ்வதின்"

பொருள்: "இ(ந்த ஆடையான)தை (அவனுடைய உதவியோடு) என்னிடமிருந்து எவ்வித பிரயாசை மற்றும் எவ்வித சக்தியுமின்றி எனக்கு அணிவித்து, அதனை எனக்கு அளித்தவனுமாகிய அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும் உரித்தாகுக!"

நூல்: நஸாயீ தவிர அஹ்லுஸ்ஸுனன் இதனைப் பதிவு செய்திருக்கிறார்கள்.
புத்தாடை அணிந்தவருக்காக (மற்றவர் கூறும்) துஆ!
"துப்லீ, வ யுக்லிஃபுல்லாஹு தஆலா"


பொருள்: "நீர் பழுதாக்குவீர்! உயர்ந்தோனாகிய அல்லாஹ் (அதற்கு) பகரத்தை நல்குவான்"


"இல்பிஸ் ஜதீதன், வ இஷ் ஹமீதன், வ முத் ஷஹீதன்"


பொருள்: "புதியதை நீர் அணிந்து, புகழுக்குரியவனாகவும் வாழ்ந்து, வீர மரணம் எய்திடுவீராக!"

புத்தாடை அணியும் போது கூறப்படும் துஆ!
5) "அல்லாஹும்ம லகல் ஹம்து, அன்த கஸவ்தனீஹி, அஸ்அலுக மின் கைரிஹி வகைரி மாஸுனிஅ லஹு, வஅஊது பிக மின் ஷர்ரிஹி வஷர்ரி மாஸுனிஅ லஹு"

பொருள்: "யா அல்லாஹ்! புகழ் அனைத்தும் உனக்கே உரியது. நீதான் எனக்கு அதை அணிவித்தாய். அதன் நன்மை மற்றும் எதற்காக அதை தாயார் செய்யப்பட்டதோ அதன் நன்மையை உன்னிடம் நான் கேட்கிறேன். இன்னும், அதன் தீமை மற்றும் எதற்காக அதை தயார் செய்யப்பட்டதோ அந்த தீமையிலிருந்து உன்னிடம் காக்கத் தேடுகிறேன்."

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக